வெளிநாட்டு பயணங்கள் தொடர்பிலான எச்சரிக்கையை கனேடிய அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
இதுவரை காலமும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கனடா அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
தற்பொழுது அந்தப் பயண எச்சரிக்கையை கனேடிய அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளது.
எனினும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் நிலவி வரும் கோவிட் சூழ்நிலைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும் இதன் அடிப்படையில் கனேடியர்கள் தங்களது பயணங்களை தீர்மானிக்க முடியும் எனவும் நாட்டின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமைகள் தொடர்ந்தும் உலகில் நீடித்து வருவதனை மறுப்பதற்கில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.