Home உலகம் மெல்பர்னில் 9 மாதங்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு

மெல்பர்னில் 9 மாதங்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு

by Jey

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது.

இருப்பினும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இடையில் அது விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தொற்று மீண்டும் அதிகரித்ததால் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு 9 மாதங்களாக பொது முடக்கம் நீடித்து வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாததால், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் கடுப்பான அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கத்தை ரத்து செய்வதாக அரசு நேற்று இரவு அறிவித்தது. இதனையடுத்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கொரோனாவால் சலூன்கள் மூடப்பட்டு இருந்ததால் பலரால் முடிதிருத்த முடியாமல் போனது. தற்போது பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மக்கள் சலூன்களை நோக்கி படையடுத்தனர். இதனால் சலூன்களில் கூட்டம் அலைமோதியது. பல சலூன்களில் மக்கள் முன்பதிவு செய்த பின்னர் முடிதிருத்தியது குறிப்பிடத்தக்கது.

related posts