கனடாவின் புதிய அமைச்சரவை குறித்து நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.
லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பற்றி அறிவிக்கப்பட உள்ளது.
கனேடிய தலைநகரில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய ரீதியிலான சமனிலை மற்றும் பால்நிலை சமத்துவம் என்பனவற்றை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது.
கடந்த தேர்தலில் பதவியிழந்த மூன்று பெண் அமைச்சர்களுக்கான பதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.