Home உலகம் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்கள்

பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்கள்

by Jey

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்களில் பல்வேறு நபர்களால் பதிவிடப்பட்ட வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்களும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி வன்முறை நடத்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய உள் ஆய்வில், டெல்லி வன்முறை நடைபெற்ற சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக பரவியுள்ளது. தகவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் திணறி வந்துள்ளது.

பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ்-அப்பில் வன்முறை, வெறுப்புணர்வு, மோதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பெரிய அளவிலான கருத்துளுக்கு இந்திய பயனாளர்கள் உள்ளாகியுள்ளனர். இந்த வெறுப்புணர்வு கருத்துக்கள் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதலே பேஸ்புக்கில் அதிகமாக பரவத்தொடங்கியுள்ளது’ என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

related posts