எயார் கனடா நிறுவனம் கோவிட் சுய பரிசோதனை திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
சுயமாக கோவிட் தொற்று குறித்து பரிசோதனை செய்யக் கூடிய பரிசோதனை முறைமை ஒன்றை எயார் கனடா நிறுவனம், பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.
சுமார் 45 நிமிடங்களில் இந்த பரிசோதனையின் மூலம் முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்பும் பயணிகளுக்காக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.