கனடாவிற்கு விஜயம் செய்ய விரும்புவதாக பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கப் பாடசாலைகளில் நடாத்தப்பட்டு வந்த வதிவிடப்பாடசாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் பழங்குடியினத் தலைவர்களை சந்திக்க பாப்பாண்டவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
எப்போது கனடாவிற்கு விஜயம் செய்வார் என்பது பற்றிய திகதிகள் அறிவிக்கப்படவில்லை.
எனினும், கனடாவிற்கு விஜயம் செய்து பழங்குடியின தலைவர்களுடன் பாப்பாண்டவர் சந்திப்பு நடாத்த விரும்புகின்றார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் முனைப்பாக பாப்பாண்டவர் கனடாவிற்கு விஜயம் செய்வார் என கருதுவதாகத் தெரிவித்துள்ளது.