கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஒரு வார கால விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஐரோப்பாவிற்கு பயணம் செய்கின்றார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
ரோமில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பிரதமர் ட்ரூடொ பங்குபற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ள COP26 காலநிலை மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்துக்கும் பிரதமர் விஜயம் செய்ய உள்ளதாகவும், பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.