பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் கனேடிய விஜயத்தை வரவேற்பதாக பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாப்பாண்டவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கான தலைமையகமான Tk̓emlúps te Secwépemc இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவது மிகவும் அவசியமானது என பாப்பாண்டவரிடம் வலியுறுத்த உள்ளதாக பழங்குடியினத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பழங்குடியின மக்களுக்கு உதவ உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.