பிழையான தகவல்கள், கடும்போக்குவாதம் உலகப் பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சில அரசாங்கங்களும் போலிப் பிரச்சாரங்களையும், சைபர் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கும் பொருளாதாரங்களுக்கும் இந்த நடவடிக்கையானது ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகள் சீனாவுடன் ஆக்கபூர்வமான பொருளாதார உறவுகளை பேணுவது புத்திசாதூரியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.