கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அமெரிக்க எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடாத்தப்படாது என காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 8ம் திகதி அமெரிக்க எல்லைப் பகுதி திறக்கப்படுகின்றது.
தரை வழியாக அமெரிக்கா பயணம் செய்யும் கனேடியப் பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எல்லையைக் கடக்கும் கனுடிய பிரஜைகள் என்ன காரணத்திற்காக பயணிக்கின்றார்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் பற்றிய விபரங்களை வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோவிட் பரிசோதனை முடிவு பற்றி எந்தவிடயமும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.