காலநிலை மாற்றம் தொடர்பில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
க்ளாஸ்கோவில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் வெப்பமயாதலை 1.5 பாகை செல்சியஸாக பேணுவது தொடர்பில் இந்த மாநாட்டில் இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பில் கனடா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.