ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கிளாஸ்கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலின் அனைத்து வாயில்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் சில முக்கியஸ்தர்கள் ஹோட்டலை விட்டு வௌியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.