மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு பொருந்தும் குறைந்தபட்ச ஊதியத்தை (மாறும் அகவிலைப்படி) தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் திருத்தியுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விலை உயர்வு மூலம் சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
வேரியபிள் டியர்னஸ் அலவன்ஸ் எனப்படும் VDA ஆனது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) தொழிலாளர் பணியகத்தால் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைக்கப்பட்ட அலுவலகம்) தொகுக்கப்பட்ட விலைக் குறியீட்டின் அடிப்படையில் திருத்தப்பட்டது.
2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கான சராசரி CPI-IW ஆனது சமீபத்திய மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) திருத்தத்தை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.
“நாடு கோவிட்-19 (Covid-19) தொற்றுநோயின் தாக்கத்தால் போராடி வரும் நேரத்தில், மத்தியத் துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகை தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விகிதத்தை திருத்தியுள்ளது. மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) 1.10.2021 முதல் அமுலுக்கு வரும்” என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.