கனேடிய அரசாங்கம், சர்வதேச விமானப் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 30ம் திகதி அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடனாவின் உள்ளுர் விமான நிலையங்கள் சர்வதேச விமானங்கள் தரையிறக்கப்படுவதற்கு அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்கப்ரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.