ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் பதினைந்து டொலர்களாக நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் குறைந்தபட்ச சம்பளம் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சம்பளத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மணித்தியாலத்திற்கு பதினைந்து டொலர்கள் என்ற அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், தேர்தலுக்கு சில காலங்கள் இருக்கும் நிலையில் மாகாண அரசாங்கம் இவ்வாறு சம்பளத்தை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.