கனடாவில் தனது 87ம் வயதில் பட்டம் பெற்றுக் கொண்டு தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
வரதா சண்முகநாதன் என்ற 87 வயது பெண் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
வரதா சண்முகநாதன் கலைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
யோர்க் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலை பட்டமளிப்பு நிகழ்வில் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்டம் பெற்றுக்கொள்ள கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக வரதா சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த வரதா, தற்பொழுது கனடாவில் 87 வயதில் முதுகலைப் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சிவில் யுத்தம் மற்றும் சமாதானத்திற்கான சந்தர்ப்பம் என்ற தொனிப்பொருளில் வரதா தனது பட்டக் கற்கை நெறிக்கான ஆய்வினை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.