Home கனடா எயார் கனடா நிறுவனம் 800 பணியாளர்களை இடைநிறுத்தியது

எயார் கனடா நிறுவனம் 800 பணியாளர்களை இடைநிறுத்தியது

by Jey

எயார் கனடா நிறுவனம் சுமார் 800 பணியாளர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

முழுமையான அளவில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

எயார் கனடா நிறுவனத்தில் சுமார் 27000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது நிறுவனத்தின் 96 வீதமானவர்கள் முழு அளவில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் ராவ்சேயூ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பணியாளர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts