தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கடற்படையினர் நேற்று பசுபிக் பெருங்கடல் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மல்பிலோ தீவு பகுதியில் 3 சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஒரு அதிவேக படகில் கடத்தி வரப்பட்ட 7.41 டன் (7 ஆயிரத்து 410 கிலோ) கொகெய்ன் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 249 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போதைப்பொருளை கடத்தி வந்த 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்படவர்களில் 3 பேர் ஈகுவடாரையும், எஞ்சிய 3 பேர் கொலம்பியாவையும் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்லனர்.