அல்பர்ட்டா மாகாண அமைச்சர் டெவின் டிரிசன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பணியில் இருந்த போது மது பானம் அருந்தியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
டிரிசன் விவசாய மற்றும் வனவளத்துறை அமைச்சராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை முதல்வர் ஜேசன் கெனியிடம் சமர்ப்பித்ததாகவும் டிரிசன் தெரிவித்துள்ளார்.
தமது நடத்தை குறித்து வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து தனது உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.