Home கனடா ஒன்றாரியோவில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தகுதியுடையவர் பற்றிய விபரங்கள் வெளியீடு

ஒன்றாரியோவில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தகுதியுடையவர் பற்றிய விபரங்கள் வெளியீடு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு இந்த கோவிட் பூஸ்டர் மாத்திரை ஏற்றப்பட உள்ளது.

நேற்றைய தினம் முதல் இந்த பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் வரையில் பூஸ்டர் மாத்திரை பெற்றுக் கொள்ள தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மாத்திரையைப் பெற்றுக் கொண்டு ஆறு மாதங்கள் கடந்தவர்கள் இந்த மூன்றாம் மாத்திரை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts