Home இலங்கை அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

by Jey

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்நிலைமை நீடிக்கின்றது. எனவே, பொறுமை காக்கவும். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும்.” – என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதித் திறப்பு நிகழ்வல் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

related posts