எத்தியோப்பியாவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பதற்ற நிலைமையை கருத்திற் கொண்டு கனேடிய வெளிவிவகார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனேடிய ராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் வடக்கு பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பியாவில் வாழ்ந்து வரும் கனேடியர்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் அது குறித்து அறிவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பான முறையில் வெளியேற முடிந்தால் கனேடியர்கள் வெளியேற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.