கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக சில நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் சில மாதங்களுக்கு மளிகை பொருட்களின் விலைகள் அதிகரிப்பினை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஐந்து வீதம் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் சில பொருட்களின் விலைகள் 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.