பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் முதல் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகள் நிரம்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.