மோசடிகள் காரணமாக கனேடியர்கள் 163 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறு பாரிய தொகை பணத்தை மக்கள் இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பில் சுமார் 33000 அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 15 வகையான மோசடிகளின் மூலம் சிலர் ஒரு மில்லியன் டொலர் வரையில் இழந்துள்ளனர்.
முதலீடு குறித்த மோசடிகளின் மூலமே அதிகளவில் மக்கள் பணத்தை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.