பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளி தாக்கம் காரணமாக ஆயிரக் கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளன.
இன்னும் ஆயிரக் கணக்கான விலங்குகள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் விவாசத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் Lana Popham தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பாதுகாப்பதற்கு தன்னார்வ தொண்டர்களும் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.