Home கனடா மருந்தகங்களில் கோவிட் பரிசோதனை செய்ய அனுமதி

மருந்தகங்களில் கோவிட் பரிசோதனை செய்ய அனுமதி

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தின் மருந்தகங்களில் கோவிட் பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்களுக்கு பரிசோதனை நடாத்துவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி பேணுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் பரிசோதனை நடாத்துவதற்கு மாகாணத்தின் சுமார் ஆயிரம் மருந்தகங்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts