46 மில்லியன் டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சியை களவாடிய குற்றச்சாட்டின் பேரில் ஒன்றாரியோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமெரிக்க இலத்திரனியல் குற்றச் செயல்கள் குறித்த விசேட செயலணி என்பன கூட்டாக மேற்கொண்ட விசாரணகளின் அடிப்படையில் இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிம் ஸ்வெப் அட்டாக் எனப்படும் செலியுலர் வலையமைப்பினை ஊடறுத்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
களவாடிய பணத்தைக் கொண்டு ஆன்லைன் கேம் யூசர் நேம் ஒன்றை குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் வயது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.