Home இந்தியா வேளாண் சடடங்களை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை இணக்கம்

வேளாண் சடடங்களை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை இணக்கம்

by Jey

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது.

இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts