ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் பாலின மாற்று சிகிச்சைகளுக்கு தடை விதிக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பாலின மாற்று சிகிச்சைகளுக்கு தடை விதிக்கும் சட்ட முன்மொழிவொன்று இன்று கனேடிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த நாடாளுமன்ற அமர்வு காலத்தில் இந்த சட்டம் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், தேர்தல் அறிவிப்பு காரணமாக சட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்ட இடைவெளிகளை தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.