கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் விமானத்திலும், ரயிலிலும் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டள்ளது.
12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடை அமுல்படுத்தப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு சிறிய சலுகையொன்று வழங்கப்பட உள்ளது.
இதன்படி, தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் எடுத்துக் கொண்ட கோவிட் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒமிகோர்ன் திரிபு காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.