றொரன்டோவில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி குறித்த சட்ட அமுலாக்கத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுகின்றது.
றொரன்டோவின் மொத்த பொலிஸ் உத்தியோகத்தர் எண்ணிக்கையில் 2.7 வீதமானவர்கள் இன்னமும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ பொலிஸ் திணைக்களத்தில் கடயைமாற்றி வரும் 7415 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர்.