கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கோவிட் பரிசோதனை நடாத்தப்படும் என சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரோன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிக்கும் விமானப் பயணிகளிடம் இவ்வாறு கோவிட் பரிசோதனை நடாத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அல்லது தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத அனைத்து விமானப் பயணிகளிடமும் இவ்வாறு பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
கோவிட் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எல்லைப் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாகாண அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.