Home இந்தியா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி

by Jey

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக 12 எம்.பி.க்களை மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியவுடன், மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர். சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர்.

இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரும் பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். எதிர்கட்சிகளின் இந்த அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

 

related posts