Home உலகம் துபாய் நகரம் வெளிநாட்டினர் வாழ்வதற்கு ஏற்ற நகரம்

துபாய் நகரம் வெளிநாட்டினர் வாழ்வதற்கு ஏற்ற நகரம்

by Jey

உலகில் உள்ள 57 நகரங்களில் வெளிநாட்டினர் சிறப்பான முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், வேலை செய்யவும் சிறந்த நகரம் எது? என்பது குறித்த புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மொத்தம் 12 ஆயிரத்து 420 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் துபாய் நகரம் 3-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 20-வது இடத்தை துபாய் நகரம் பெற்றிருந்தது.

இந்த ஆண்டு 3-வது இடத்துக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக பொதுமக்கள் கூறுவது துபாய் நகரம் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மிகவும் எளிதில் தங்களது வேலையையும், இருப்பிடத்தையும் அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. மேலும் அரபி மொழி உள்ளிட்ட உள்ளூர் மொழிகளை பேசக்கூடிய கட்டாயம் எதுவும் இல்லாமல் தங்களுக்கு தெரிந்த மொழிகளை வைத்தே பணிகளை மேற்கொள்ள முடியும்.

இங்கு 190 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் மிகவும் எளிதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை நண்பர்களாக்கி கொள்ள முடிகிறது. அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்டவையும் துபாய் நகரம் வெளிநாட்டினர் வாழ்வதற்கு ஏற்ற நகரம் என்ற பெருமையை பெறுகிறது என்று தெரிவித்தனர். இதேபோல் அபுதாபி நகரம் 16-வது இடத்தை பெற்றுள்ளது.

related posts