ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, இஸ்ரேல், இத்தாலி, நைஜீரியா மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகளின் கொரோனாவின் Omicron வேரியண்ட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
புதிய கோவிட்-19 வகை ஓமிக்ரான் தோன்றிய பின்னர், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. எல்லைகளை மூடவும் சில நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisaiton), நோய்த்தடுப்பு மற்றும் சோதனை விகிதங்களே புதிய வேரியண்டுக்கு காரணம் என்று கூறுகிறது.
“உலகளவில், குறைந்த தடுப்பூசி கவரேஜ் மற்றும் மிகக் குறைந்த சோதனை என்ற நச்சு கலவைதான், கொரோனா வைரசின் திரிபுக்கான காரணம்” என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார், கொரோனா வைரஸின் டெல்டா திரிபை சுட்டிக்காட்டி அவர் இதை குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் மாறுபாடு நாட்டில் பதிவாகியிருப்பது குறித்து, ஒரு வாரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு (World Health Organisation) முறைப்படி தகவல் தெரிவித்தது. இந்த வகை கொரோனா வைரஸ், பல கண்டங்களுக்கும் வேகமாக பரவியது. மீண்டும், 2019 குளிர்காலத்தில், தோன்றிய கொரோனா அச்சத்தைப் போன்ற மிகப் பெரிய அச்சத்தை இந்த வெரியண்ட் உருவாக்கியுள்ளது. உலகம் ஏற்கனவே “அதிக பரவக்கூடிய, ஆபத்தான” டெல்டா மாறுபாட்டுடன் போராடுகிறது, இது தற்போது உலகளவில் வைரஸ் தொடர்பான “ஆபத்து குறையவில்லை” என்பதை நினைவூட்டுவதாக கெப்ரேயஸ் தெரிவித்தார்.