பிரித்தானியாவில் தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்றிட்டத்திற்கான பிரேரணை லண்டன் பெருநகர அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டப் பிரேரணை லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான நிக் றொஜர்ஸினால் லண்டன் பெருநகர அவையில் இந்த பிரரேணை முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும் தரப்பான தொழிற்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு நல்கியுள்ளனர்.