50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச வழங்கப்பட வேண்டுமென கனேடிய தேசிய நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வைரஸ் திரிபுகளுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடாக இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார முன்னரங்கப் பணியாளர்கள், சில பகுதிகளைச் சேர்ந்த பூர்வகுடிகள் ஆகியோருக்கும் பூஸ்டர் மாத்திரை வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட முடியும் என மேலும் தெரிவித்துள்ளது.