ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் உயர்கல்வி கற்பது, பெண்களின் ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானின் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யும் நடைமுறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய தலீபான்கள் அமைப்பு தடை விதித்துள்ளது. பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. கணவன் உயிரிழந்தால் அவரது விதவை மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்கு உள்ளது’ என தலீபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளை நீதிமன்றங்கள் கவனத்தில் உள்ள வேண்டும் என்று தலீபான்கள் செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.