ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் சுமார் ஆயிரத்து இருநூறு பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 28ம் திகதியின் பின்னர் மாகாணத்தில் ஒரே நாளில் பதிவான அதி கூடிய நோய்த தொற்றாளர் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், கடந்த 24 மணித்தியாலங்களில் மாகாணத்தில் எவ்வித கோவிட் மரணங்களும் பதிவாகவில்லை.
எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை கிரமமான அடிப்படையில் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாக்காணத்தில் தொற்றுக்கு இலக்காவோரின் வீதம் தற்பொழுது 3.2 ஆக காணப்படுகின்றது.