Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

by Jey

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

அரசின் வன்முறைச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய சபை அமர்வுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய சபை அமர்வை புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, சபை அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என நேற்று முன்தினம் சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts