கனேடிய விண்வெளி ஆய்வு முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியொருவர் சீன நிறுவனத்திற்காக பணியாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீன வான்வெளி நிறுவனமொன்றின் சார்பில் குறித்த அதிகாரி செயற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
61 வயதான Wanping Zheng என்ற பொறியியலாளர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனேடிய விண்வெளி முகவர் நிறுவனத்தின் பொறியியலாளர் என்ற பதவி நிலையை பயன்படுத்தி அவர் சில கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் செய்மதி நிலையமொன்றை நிறுவுவது தொடர்பில் குறித்த நபர் சீன நிறுவனத்தின் சார்பில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.